உன் சிரிப்பில் குளிர்ந்தபடி
நான் திரும்பிய போது
புதிதாய் பிறந்தெழுந்த ஒரு ஆட்டுக்குட்டியாய்
துள்ளிய படி
சிலிர்ப்புடன் ஓடிவந்தது மனது !
நான் திரும்பிய போது
புதிதாய் பிறந்தெழுந்த ஒரு ஆட்டுக்குட்டியாய்
துள்ளிய படி
சிலிர்ப்புடன் ஓடிவந்தது மனது !
உளம் முழுதும் காயப்பட்டு
மீண்டும் எழமுடியாத படுக்கைப் புண்ணின்
வலியாய்
என் இதயத்தில் எங்கினும்
வடிந்து ஓடிய ரணத்தை
உனது மூக்கு நுகர மறுத்துவிட்டது !
மனங்களில் ஏறிய முட்களை
வலிதெரியாமல் திருகும் உன்
மயிலிறகு விரல்களை
என் சருமத்தில்
அகவ விடாமல் தொடர்கிறது
உன் பந்தயத்தோடு கூடிய ஆணவம் !
கண்ணீரின் கனத்தில் மிதந்த
உன் நினைவு
தாயின் தாலாட்டில் ஓராட்டுகிறது!
ஒவ்வொரு தனிமையழுகையிலும்
ஆறுதலாய்
அரவணைத்து போகிறது
அம்மாவாய் உன் முகம் !
யாரோ கொளுத்திவிட்டு போன
பெரும் அனலாய்
உளமெரிய
என்றோ என்னோடுயிருக்கையில்,
நீ வீழ்த்தி விட்டுப் போன
ஒரு மழலைக் கொஞ்சல்
துடித்தபடி
சூடமர்த்தியது!
உளத்தின் கருகிய தீச்சல் மணத்தில்
புழுங்கிப் போயின
மண்புழுக்கள்,
நிழல் தந்த மரம்
கடுமையான குழப்பத்திலும் வீழாமலிருந்தது!
பெருங்கடலாய் அலையடிக்க
உப்புக் காற்றின் உள் வருகை
உன் வியர்வைத்துளியாய் காயம் நனைத்தது !
உடலில் படர்ந்த வலியை
ஒரு நிமிடத்தில்
காணாமல் செய்தது
காற்றில் பறந்து மேனி தடவிச் சென்ற
உன்
ஒற்றைத் தலைமுடி !
தோழியே !
தோழமையின் கருவறையில் காதல்
கருக் கொண்டது
`மீறலின் தர்மம் காதலுக்கு`
சரியாய் புலனாகிறதெனக்கு !
குறிப்பு .19.08.2012 இரவு 12 மணிக்கு எழுதப்பட்டது
மீண்டும் எழமுடியாத படுக்கைப் புண்ணின்
வலியாய்
என் இதயத்தில் எங்கினும்
வடிந்து ஓடிய ரணத்தை
உனது மூக்கு நுகர மறுத்துவிட்டது !
மனங்களில் ஏறிய முட்களை
வலிதெரியாமல் திருகும் உன்
மயிலிறகு விரல்களை
என் சருமத்தில்
அகவ விடாமல் தொடர்கிறது
உன் பந்தயத்தோடு கூடிய ஆணவம் !
கண்ணீரின் கனத்தில் மிதந்த
உன் நினைவு
தாயின் தாலாட்டில் ஓராட்டுகிறது!
ஒவ்வொரு தனிமையழுகையிலும்
ஆறுதலாய்
அரவணைத்து போகிறது
அம்மாவாய் உன் முகம் !
யாரோ கொளுத்திவிட்டு போன
பெரும் அனலாய்
உளமெரிய
என்றோ என்னோடுயிருக்கையில்,
நீ வீழ்த்தி விட்டுப் போன
ஒரு மழலைக் கொஞ்சல்
துடித்தபடி
சூடமர்த்தியது!
உளத்தின் கருகிய தீச்சல் மணத்தில்
புழுங்கிப் போயின
மண்புழுக்கள்,
நிழல் தந்த மரம்
கடுமையான குழப்பத்திலும் வீழாமலிருந்தது!
பெருங்கடலாய் அலையடிக்க
உப்புக் காற்றின் உள் வருகை
உன் வியர்வைத்துளியாய் காயம் நனைத்தது !
உடலில் படர்ந்த வலியை
ஒரு நிமிடத்தில்
காணாமல் செய்தது
காற்றில் பறந்து மேனி தடவிச் சென்ற
உன்
ஒற்றைத் தலைமுடி !
தோழியே !
தோழமையின் கருவறையில் காதல்
கருக் கொண்டது
`மீறலின் தர்மம் காதலுக்கு`
சரியாய் புலனாகிறதெனக்கு !
குறிப்பு .19.08.2012 இரவு 12 மணிக்கு எழுதப்பட்டது

No comments:
Post a Comment