தினமெரியும் என் வீடு -எம்
உடலெரியும் தாய் நாடு
கணம் கணமாய் உயிர்க் கூடு -தினம்
கனம் கனமாய் சாக்காடு
ஓவ்வொரு விடியலும்
உடலெரியும் தாய் நாடு
கணம் கணமாய் உயிர்க் கூடு -தினம்
கனம் கனமாய் சாக்காடு
ஓவ்வொரு விடியலும்
அழுகையில்
கிழிக்கப்படுகிறது
ஈழத்து நாட்காட்டி !
இருட்டில் உரியப்பட்ட
தமிழச்சிகளின் சேலைகளில்
பட்டுப்போய்க்கிடக்கிறது
இனவாதக் கறை !
படுத்த பாயோடு
சவக்காடு
போகும் மனிதர்கள் அவர் !
ஈழத்தில்
தாலாட்டு பாடியும்
தூங்காது
குழந்தை
ஒப்பாரி அடமழையில் !
அகலாத வடுக்கள் மூட்டிய தீயால் -தினம்
கண்ணீர் வடிக்கிறது என் இதயம்!
அணையாத கொள்கை ஊன்றிய வேரால்
திடமாக உள்ளேன் வரலாறு எழுத !
ஒவ்வொரு அவல சாவின்
நினைவுகளாலும்
என்றுமே
அழுதபடி ஓடிப் போகிறது
முள்ளிவாய்க்கால் கடந்து வந்த
ஒவ்வொரு
நாட்களும் !
தாய் நிலமே மௌனமாய்
உயிர்
விட்டு போனாள்
சாவினைத் தாங்காது !
எங்கள் ஊரே
மயான
பூமியாய் எரிந்தபடி கிடக்கிறது
எங்களுடலால் .........
கிழிக்கப்படுகிறது
ஈழத்து நாட்காட்டி !
இருட்டில் உரியப்பட்ட
தமிழச்சிகளின் சேலைகளில்
பட்டுப்போய்க்கிடக்கிறது
இனவாதக் கறை !
படுத்த பாயோடு
சவக்காடு
போகும் மனிதர்கள் அவர் !
ஈழத்தில்
தாலாட்டு பாடியும்
தூங்காது
குழந்தை
ஒப்பாரி அடமழையில் !
அகலாத வடுக்கள் மூட்டிய தீயால் -தினம்
கண்ணீர் வடிக்கிறது என் இதயம்!
அணையாத கொள்கை ஊன்றிய வேரால்
திடமாக உள்ளேன் வரலாறு எழுத !
ஒவ்வொரு அவல சாவின்
நினைவுகளாலும்
என்றுமே
அழுதபடி ஓடிப் போகிறது
முள்ளிவாய்க்கால் கடந்து வந்த
ஒவ்வொரு
நாட்களும் !
தாய் நிலமே மௌனமாய்
உயிர்
விட்டு போனாள்
சாவினைத் தாங்காது !
எங்கள் ஊரே
மயான
பூமியாய் எரிந்தபடி கிடக்கிறது
எங்களுடலால் .........

No comments:
Post a Comment