Pages

Sunday, April 29, 2012

எழுதி வைத்த கவிதை


எங்கெல்லாம் உன் நினைவுகளோ
அங்கெல்லாம் எனது வலிகள்
ஆலயத்தின் முன்னால் -முதல்
நாள் சந்திப்பு
உனக்கு தான் பூசை செய்தேன்

முகப்புத்தகத்தில் என்
அகம் தொலைத்தேன் -உன்னிடத்தில்
அகப்பட்டு காதல் உணர்ந்தேன்

நான் எழுதிய கவிதைகள்
உன் கரங்களில் கொண்டு வந்து
கொடுத்தேன்-நீயும்
நானும் வீதியில் போகையில்
உன்னொரு கூந்தல் எனைத்தடவி
எனக்கு மட்டும் தந்துபோனது
அந்த வெயில் நேரத்தில்
ஒரு பனி மழை

உனது சிறிய கண்கள் -என்னை
உன்னிடத்தில் ஊனமாக்கிய கண்ணி(ண்) வெடிகள்

உன்னுடைய அடம்பிடிப்பு
அமெரிக்காவையே
அச்சுறுத்தும்
அழகான ஆயுதம்-என்னை
உயிரோடு சாகடிக்கும் கந்தகம்

உன்னுடைய பேச்சு
பூக்கள் தென்றலோடு கலவும் போது
வருகிற மகரந்த இசை

இதோ
நீ மௌனித்து போன அன்று
எழுதி வைத்த கவிதை
இப்போது
மரணித்து போகின்றது!
என்னை நீ
ஏமாற்றியது தெரிந்து

No comments:

Post a Comment