Pages

Sunday, April 29, 2012

எழுதி வைத்த கவிதை


எங்கெல்லாம் உன் நினைவுகளோ
அங்கெல்லாம் எனது வலிகள்
ஆலயத்தின் முன்னால் -முதல்
நாள் சந்திப்பு
உனக்கு தான் பூசை செய்தேன்

முகப்புத்தகத்தில் என்
அகம் தொலைத்தேன் -உன்னிடத்தில்
அகப்பட்டு காதல் உணர்ந்தேன்

நான் எழுதிய கவிதைகள்
உன் கரங்களில் கொண்டு வந்து
கொடுத்தேன்-நீயும்
நானும் வீதியில் போகையில்
உன்னொரு கூந்தல் எனைத்தடவி
எனக்கு மட்டும் தந்துபோனது
அந்த வெயில் நேரத்தில்
ஒரு பனி மழை

உனது சிறிய கண்கள் -என்னை
உன்னிடத்தில் ஊனமாக்கிய கண்ணி(ண்) வெடிகள்

உன்னுடைய அடம்பிடிப்பு
அமெரிக்காவையே
அச்சுறுத்தும்
அழகான ஆயுதம்-என்னை
உயிரோடு சாகடிக்கும் கந்தகம்

உன்னுடைய பேச்சு
பூக்கள் தென்றலோடு கலவும் போது
வருகிற மகரந்த இசை

இதோ
நீ மௌனித்து போன அன்று
எழுதி வைத்த கவிதை
இப்போது
மரணித்து போகின்றது!
என்னை நீ
ஏமாற்றியது தெரிந்து

Wednesday, April 25, 2012

முடிச்சுகள்


கல்லடிபட்ட நாயாகவே 
அலறிய படி ஓடிக்கொண்டிருக்கிறது 
மனசு ! 


முடிவுகள் முரணாகுமோவென்ற 
அச்சத்திலேயே 
முடிச்சுகள் அவிழ்க்கபடாமலிருக்கின்றன! 


நள்ளிரவின் அமைதியை 
நண்பகலில் கூட உணரமுடிகிறது, 
சத்தங்கள் அற்று கிடக்கும் 
எனது 
பகல்ப்பொழுதுகள் ! 


எச்சிலினால் வலை பின்னி 
இரை காணும் 
சிலந்தி ! 
எனை பார்த்து சிரிக்கிறது 
நம்பிக்கை இல்லாதவன் என ? 


நான் ஒரு அறையின் மூலையில் 
முடிச்சுகளோடு 
முரண்பட்டபடி ..........